• Mar 09 2026

இளையராஜா மகள் உயிரிழப்பில் கலங்கிய நடிகர் விஜய்! என்ன செய்தார் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி உயிரிழந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

பவதாரணிக்கு தற்போது 47 வயதான நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


இளையராஜாவின் மகள் பவதாரிணியில் இறுதி சடங்குகள் நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் திரையுலகமே கண்ணீரில் மூழ்கிக் காணப்பட, நடிகர் விஜய், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபுவும் மிகவும் கலங்கியுள்ளார்கள்.

இதை தொடர்ந்து, நடிகர் விஜய் தனது கோட் பட படப்பிடிப்பு ரத்து செய்துள்ளதோடு,  ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்டுகளும் கொஞ்சம் தாமதமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement