• Jul 27 2024

சீக்கிரம் சென்று விட்டாய்... அந்த பாடல் எப்போதும் மறையாது! பவதாரிணியின் மறைவுக்கு சிம்பு வேதனை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் இசைஞானி இளையராஜா.  சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.  

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக காணப்படும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில். நேற்று மாலை 5.20 மணிக்கு இலங்கையில் திடீரென மரணமடைந்துள்ளார்.


கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதையடுத்து, பாடகி பவதாரிணியின் மரண செய்தி கேட்டு பல்வேறு பிரபலங்களும் தமது இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு பவதாரணி மறைவு குறித்து உருக்கமாக எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்து இருக்கிறார். 

அதில், மாநாடு படத்தில் வரும் மாஷா அல்லா பாடலை பவதாரணி பாடியிருந்தார் அவரது குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது என சிம்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளையராஜாவின் மகள் பவதாரிணியில் இறுதி சடங்குகள் நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement