• Sep 22 2023

உயிரை மாய்த்த விஜய் ஆண்டனி மகள்... விடயமறிந்து நேரில் சென்ற நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா..!

Prema / 3 days ago

Advertisement

Listen News!

திரையுலகில்  சிறந்த நடிகராகவும், பிரபல இசையமைப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரின் மகள் இறந்த செய்தி கேள்விப்பட்டு நடிகர் விஜயின் தாயார்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். 


அந்தவகையில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் . அவர்களில் மூத்தமகளின்  பெயர் மீரா , இளைய மகளின்  பெயர் லாரா. மூத்தமகள் மீரா கிரீன்பார்க் என்னும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவர். இவர் நேற்று இரவு தூங்குவதற்காக அறைக்கு சென்ற பிறகு , அதிகாலை 3 மணி அளவில்  விஜய் ஆண்டனி  அவர்கள் மகளின் அறைக்கு சென்று பார்த்த போது மகள் மீரா தூக்கிட்டு அவரின் துப்பட்டாவில் தொங்கியபடி இருந்துள்ளார்.


அதிர்ச்சியில் உறைந்து போன விஜய் ஆண்டனி   வேலையாட்களின் உதவியுடன் அவரை கீழே இறக்கி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். வைத்தியர்கள் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மீரா சிலநாட்களாக மனஅழுத்தத்தில் இருத்துள்ளார் என்பது தெரியவந்தது. இருப்பினும் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி இறந்தது பெரிய சோகமே.  


இவரின் இறப்பைத் தொடர்ந்து பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்கள் விஜய் ஆண்டனி மகள் மீராவின் இறந்த செய்தி கேள்விப்பட்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement