• Sep 22 2023

காணாமல் போன குணசேகரன்... கதறி அழும் குடும்பம்... உண்மையை சொல்லிச் சொல்லி அழும் கரிகாலன்... கண் கலங்க வைத்த 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 3 days ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த சீரியலின் கதைப்படி தற்போது குணசேகரன் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். 


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் வீட்டிற்கு ஆடிட்டர் வந்துள்ளார். அப்போது ஞானம் அவரிடம் "அண்ணை என்ன சார் சொல்லிட்டுப் போனாரு, தயவு செய்து சொல்லுங்க எனக்கேட்டு கதறி அழுகின்றார். அப்போது ஆடிட்டர் ஒரு கொப்பியை கையில் கொடுக்கின்றார்.


மறுபுறம் கரிகாலனும் கதறி அழுகின்றார். "எங்கயா போனா, உன்னைப் புரிஞ்சுக்காதவங்ளுக்கு நீ புதிர் ஐயா, உன்னை புரிஞ்சுக்கிட்ட எனக்கு உயிர் ஐயா, காதெல்லாம் உன் குரலாய் கேட்குதையா" எனக் கூறிக் கூறி விம்மி விம்மி அழுகின்றார். 


அதேபோன்று கதிர், விசாலாட்சி, ஆதிரை உட்பட அனைவரும் குணசேகரனுக்காக ஏங்கி ஏங்கி அழுகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.   


Advertisement

Advertisement

Advertisement