• Sep 22 2023

குடும்பத்தில் நிகழ்ந்த 2தற்கொலை சம்பவங்கள்... மீளாத் துயரில் வாடும் விஜய் ஆண்டனி..!

Prema / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களையும் திரையுலகினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


இவரின் இறப்பினைத் தொடர்ந்து ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர். எவ்வளவு ஆறுதல் கூறினால் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு இது ஒரு தாங்க முடியாத வலி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏனெனில் விஜய் ஆண்டனி குடும்பத்தில் நிகழும் இரண்டாவது தற்கொலை சம்பவம் இது.


அதாவது இதற்கு முன்னரே அதாவது குறிப்பாக விஜய் ஆண்டனிக்கு 7வயதாகி இருக்கும் போது அவரின் தந்தையும் தற்கொலை செய்து தான் உயிரிழந்திருக்கின்றார். இவரின் இறப்பிற்குப் பின்னர் அவரின் தாய் தான் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கின்றார்.

இவ்வாறாக ஏற்கெனவே வாழ்வில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கின்றார் விஜய் ஆண்டனி. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது தந்தையை தொடர்ந்து தன் மகளும் தற்கொலை செய்துகொண்டது விஜய் ஆண்டனிக்கு மீள முடியாத அளவிற்கு பெரும் சோகத்தைக் கொடுத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement