• Jan 19 2025

சென்னை கிரிக்கெட் அணியின் உரிமையாளரானார் நடிகர் சூர்யா! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆனதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற புதிய வகை 10 ஓவர்கள் கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஐஎஸ்பிஎல் என்று கூறப்படும் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


ஏற்கனவே ஹைதராபாத் அணியின் உரிமையாளராக ராம்சரண் தேஜா, மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சன், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய குமார் மற்றும் பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் சென்னை அணியின் உரிமையாளராக தன்னை அறிவித்துள்ளார். 

இதன் போது பேசிய சூர்யா, ஐஎஸ்பிஎல் டி10 தொடரில் எங்கள் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களும், விளையாட்டுத்துறை மற்றும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தகவலை அறிந்த  திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement