தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தால் சமூக வட்டாரங்களில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக, விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், பல தமிழ் நடிகர்களும், அரசியலுக்கு விஜய் என்ட்ரி கொடுத்தது பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே முன்னணி நடிகர் ராதாரவி சமூக வலைத்தளங்களில் விஜய் குறித்த சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது நடிகர் ராதாரவி, "தேர்தல் வந்தால் தவெகவின் சாயம் வெளுத்திடும்" என்று சிலர் விமர்சனம் முன்வைத்தாலும், அதற்கு நேர்மாறாக, "ஒருவேளை விஜய் ஜெயிச்சுவிட்டால் அது மாஸாக இருக்கும். ஏனென்றால் மக்கள் செல்வாக்கு அதிகமாக விஜய்க்கு இருக்கு. நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டே செல்கிறது." என்றார்.

கடந்த பல வருடங்களாக, விஜயின் படங்கள் மக்கள் மனதில் அதிக செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அவரது அரசியல் வருகைக்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவளிப்பார்கள் என நடிகர் ராதாரவி தனது பார்வையினை முன்வைத்துள்ளார்.
Listen News!