• Jan 18 2025

முத்துக்காளை பட்டதாரியாக இதுதான் காரணமா... குட்டி ஸ்டோரியை போட்டு உடைத்த நடிகர் முத்துக்காளை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய காமெடி நடிகர் தான் முத்துக்காளை. தனது 58 வயதில் புதிய சாதனை படைத்து சாதிக்க வயது தடையே இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில். தான் சாதனை செய்ய வேண்டும் என தோன்றியமைக்கான காரணத்தை பகிரங்கமாக கூறியுள்ளார்.


நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நட்பு ஏற்பட அவருடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்தார் முத்துக்காளை. அவருடன் இணைந்து நடித்த செத்து செத்து விளையாடலாம் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாததால் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.  இந்நிலையில்,58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த B.Lit தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். 


தற்போது, B.Lit தமிழில் தேர்வெழுதி அதிலும் பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளார்.சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்காளை தனது கனவை 58 வயதில் நிறைவேற்றி இருக்கிறார். வயது என்பது Just நம்பர் மட்டும் தான் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை முத்துக்காளை நிரூபித்துள்ளார்


இந்நிலையில் இவர் தற்போது ஊடகம் ஒன்றிற்கு தனது சாதனை தொடர்பான ரகசியத்தை கூறியுள்ளார். "அதாவது  கொஞ்சம் வருட காலமாக நான் வைன் சாப் வாசலில் படுத்து கிடப்பது போலவே மீடியாக்கள் பரப்பி வருகின்றது. நான் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து 7 வருடங்கள் ஆகிறது. எந்த சேனலை பார்த்தாலும் முத்துக்காளை ஒரு குடிகாரன்  என்று தான் அடிபடும்". 

"அந்த பெயரை மாற்ற வேண்டும், என்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக நான் ஏதாவது வித்தியாசமாக செய்துகாட்ட வேண்டும் என்று நினைத்து தற்போது பட்டதாரி பட்டம் பெற்று எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறேன். இதுபோல நீங்களும் முயட்சி செய்து சாதிக்கணும் என்று கூறியுள்ளார்.  


மேலும் "இதற்கு பிறகு ஆராச்சி பண்ணலாம்னு இருக்கிறேன். குடிப்பழக்கம் எதனால் ஏற்படுகிறது? குடிக்க தூண்டும் காரணி என்ன ? அது உடல் உள்ளே போய் என்ன செய்யும் என்பதை ஆராச்சி செய்ய போகிறேன். குடிப்பழக்கத்தால் நான் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அந்த பாதிப்பு மற்றவருக்கு வராமல் என்னால் 2 பேரை திருத்த முடிவும் என்றால் அதுவே பெரிய சந்தோசம் என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement