• Dec 06 2024

ப்ளூ சட்டை மாறனுக்கு வாயில் சனி! நடிகர் கலையரசன் கண்டனம்! ரசிகர்கள் விமர்சனம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அட்டகத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கலையரசன். இவர் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர வேடத்தில் எல்லோரது கவனம் ஈர்க்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக கலையரசன் கோலிவுட்டில் இருந்து வருகிறார்.


இந்நிலையில் இவர் யூடுப்விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் " ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை! முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என கலையரசன் டுவிட் செய்துள்ளார். 

d_i_a


ப்ளூ சட்டை மாறன் மாறன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தினை விமர்சனம் செய்துள்ளார். அதை அவர் அருவெறுப்புடன் விமர்சனம் செய்துள்ளதாக குறிப்பிட்டே கலையரசன் டேக் செய்துள்ளார். இந்த போஸ்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கலையரசன் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். 

Advertisement

Advertisement