• Jan 19 2025

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்...சடலமாக மீட்கப்பட்ட பிரபல இயக்குனர்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

மாதா, எட்டேலு மஞ்சுநாதா மற்றும் டைரக்டர்ஸ் ஸ்பெஷல் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல கன்னட இயக்குநர் தான் குருபிரசாத்.இவரிற்கு தற்போது 52 வயதான நிலையில் இவர் பெங்களூரில் உள்ள அவரது குடியிருப்பில் இன்றைய தினம் இறந்து கிடந்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தனியாக வசித்து வந்த தசனபுரா பகுதியில் உள்ள அயலவர்கள் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்ததை அடுத்து போலீசார் விசாரணையில் குருபிரசாத் அழுகிய நிலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.


அண்மைக்காலமாக குருபிரசாத்திற்கு நிதிப் பிரச்சனைகள் சில இருந்து வந்துள்ளமையால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்தமையினால் அவர் இம்முடிவினை எடுத்துள்ளதாக இயக்குனர் தரப்பு வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன.


Advertisement

Advertisement