• Nov 10 2024

பிரபல நடிகையுடன் நடிகர் ஜெய் திருமணம்? அப்ப அஞ்சலி ஏமாந்துட்டாரா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெய் நடிகை அஞ்சலியை காதலித்துக் கொண்டிருந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் வேறொரு நடிகை ஜெய் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து அஞ்சலி ஏமாந்துட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ஜெய் என்பதும் பல ஹிட் படங்களை அவர் கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது. கடந்த ஆண்டு மூன்று திரைப்படங்களில் நடித்த ஜெய் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் இன்னும் அவருக்கு சில படங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஜெய் கடந்த சில ஆண்டுகளாக நடிகை அஞ்சலியை காதலித்து வந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென ’வரலாறு முக்கியம்’ ’என்4’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரக்யா நக்ரா என்பவரை ஜெய் திருமணம் செய்து கொண்டதாக கூறி திருமண புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இருவரும் தங்கள் கைகளில் பாஸ்போர்ட் விசா வைத்துள்ளதை அடுத்து அவர்கள் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் இந்த புகைப்படத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த திருமண புகைப்படம் போலி என்றும் விளம்பர படத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது இதை உற்று கவனித்தால் நன்றாக தெரிகிறது என்றும் இந்த சீப்பான விளம்பரம் இன்னும் கைவிடப்படவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னாடி இதே போல் தான் பாலாஜி முருகதாஸ் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதன் பின் மறுநாள் அது ஒரு விளம்பர படப்பிடிப்பு என்று எல்லோரையும் மொக்கை போட வைத்தார். அதேபோல் ஜெய் திருமணமும் விளம்பர படத்திற்காக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement