• Dec 04 2023

நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளில் செய்த நெகிழ்ச்சி சம்பவங்கள்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நேற்றைய தினம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானமும் செய்துள்ளார்.  

நடிகர் அருண் விஜய் நேற்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை சாதரணமாக கொண்டாடியுள்ளார்.


இதையடுத்து, ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனது ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

அதன்படி, நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது 

Advertisement

Advertisement

Advertisement