• Oct 09 2024

நன்றி கெட்ட ஈஸ்வரியை நாறு நாராய் கிழித்த ராதிகா! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இனி என்ன என்ன நடக்கும், எவ்வாறு கதைக்களம் நகரும் என்பதை பார்ப்போம் வாங்க.

அதன்படி, கவர்மென்ட் கான்ராக்ட் கட்டாயம் எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த பாக்கியாவுக்கு ஏமாற்றம் கிடைக்குது.இதை காரணம் காட்டி இனி நீ பிசினஸ் ஏதும் பண்ண வேண்டாம்..வீட்டுல இருக்கிறவங்க பணம் தருவாங்க..அத வச்சி குடும்பம், பிள்ளைகள பாரு என ஈஸ்வரி பாக்கியாவிடம் சொல்கிறார். எனினும், இதை மறுத்து பேசுகிறார் பாக்கியா.


இதை தொடர்ந்து, எல்லாத்தையும் வீட்டுல இருந்து பார்த்த ராதிகா பாக்கியா மீது பரிதப்படுகிறார். நாம வேற கேண்டீன்ல இருந்து அனுப்பிட்டம் என வருத்தப்படுகிறார். அந்த நேரத்தில வெளிநாடு போய் இருந்த கோடீஸ்வரன் சார் வர அவரிடம் இன்னும் நாங்க கேட்டரிங் ஆர்டர யாருக்கு கொடுக்கிற என்று தெரியல.. அத பாக்கியாவுக்கே கொடுப்பமா என கேட்க,  அது நல்ல விஷயம் தானே என சந்தோசப்படுகிறார் கோடீஷ்வரன். 

இதையடுத்து ராதிகா ஆபிஸ்ல இருந்து கால் பண்ணி கேட்டரிங் ஆர்டர் உங்களுக்கு கிடைச்சி இருக்கு. நீங்க பழையபடி உங்க ஆட்களோட வந்து வேல செய்யலாம் என சொல்ல ரொம்ப சந்தோசப்படுகிறார் பாக்கியா.


இதை தொடர்ந்து, பாக்கியாவுக்கு பழையபடி காசு கைல வந்துட்டா தல கால் புரியாம நடப்பா...ராதிகாவுக்கு ஏன் இந்த தேவ இல்லாத வேல என ஈஸ்வரி சொல்ல, அந்த நேரத்தில் வந்த ராதிகா அனைத்தையும் கேட்டுட்டு என்ன ஆளுங்க நீங்க..வீட்டுக்காக தான் பாக்கியா கஷ்டப்படுற என ஈஸ்வரியை விளாசி தள்ளுகிறார் ராதிகா..மேலும் உங்க அம்மா கூட சேர்ந்தா நீங்க ரொம்ப மாறிடுவீங்க என கோபியை இழுத்து போகிறார்.

இவ்வாறு ஒரு வழியாக பாக்கியாவை புரிந்து கொண்டு ராதிகாவும் அவருக்கு துணையாக செயற்படுகிறார்.எனவே பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement