• Jan 07 2025

ஆலியா காட்டில் மழை! போன மாசம் போட் ஹவுஸ்! இந்த மாசம் சொகுசு கார்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ஆலியா மானசா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். கடந்த ஆண்டு பிரமாண்ட வீடு கட்டி,சொகுசு போட் ஹவுஸ் ஒன்றையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து எல்லாம் செய்து ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளார். மேலும் தற்போது புதிதாக கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சின்னத்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்த நட்சத்திர ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆல்யா மானசா பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 


நடிகர் சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக இனியா என்ற சீரியலில் நடித்த ஆலியா அந்த சீரியல் நிறைவின் பின்னர் அடுத்து என்ன சீரியலில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இத்தருணத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.


புதிய வீட்டை காட்டினார், புதிய போட் ஹவுஸ் விலைக்கு வாங்கினார். இப்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய கார் முன்னாள் இருந்து குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement