தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகர் அஜித் குமார், தன்னுடைய தன்னம்பிக்கையாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் "தல" என அன்பாக அழைக்கப்படுகின்றார். தற்போது அஜித் மட்டுமல்ல, அவரின் அன்பு மகனும் தந்தையைப் போலவே மற்றொரு துறையில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும், நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து மைதானத்தில் பங்கேற்று சிறப்பாக விளையாடியதனைக் காட்டியுள்ளன. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும், “அஜித்தை விட மகன் கலக்குவார் போலயே..!” எனச் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் கால்பந்து பயிற்சிகளில், ஒவ்வொரு போட்டியிலும் ஆர்வத்துடன் பங்கேற்கும் ஆத்விக், இன்று தன்னுடைய வயதுக்கு ஏற்ற மிக சிறந்த விளையாட்டு வீரர் எனப் போற்றப்படுகின்றார். ஒரு சிறிய பையனாக இருந்தாலும், அவரது துல்லியமான விளையாட்டைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!