• Jun 17 2026

22 வயதில் விபரீத முடிவெடுத்த இளம் நடிகை.. பின்னணியில் வெளியான திடுக்கிடும் காரணம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக கவனிக்கப்பட்ட சஞ்சிதா, முதலில் இந்தி தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார்

வெறும் 22 வயதிலேயே தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருந்த இவர், அதன் பின்னர் திரைப்படங்களில் வாய்ப்புகளைப் பெற்று தனது திரைப்பயணத்தை முன்னெடுத்து வந்தார். சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சாவா’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மும்பையில் தனது சகோதரியுடன் வசித்து வந்த சஞ்சிதா உகலே, ஜூன் 14 ஆம் தேதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நடிகையின் மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் சமீப காலமாக தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் காரணமும் உறுதி செய்யப்படாத நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்கிறது.


இதற்கிடையில், சஞ்சிதாவின் சகோதரர் அளித்த தகவல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று உயிரிழந்த நிலையில், அதே தேதியில் தனது தங்கையும் உயிரிழந்திருப்பது குடும்பத்தினரை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சிதாவின் திடீர் மறைவு குறித்து சமூக வலைதளங்களிலும் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. வளர்ந்து வரும் இளம் நடிகையின் இந்த இழப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து காவல்துறையின் விசாரணை முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement