• May 21 2024

மகனின் முன் முக்கிய நபரின் கன்னத்தில் முத்தமிட்ட மைனா நந்தினி.... வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மைனா நந்தினி. இவர் 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.


இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாது தற்போது வெள்ளித்திரையிலும் கால் பதித்திருக்கின்றார். அதாவது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்

அந்தவகையில் அண்மையில் வெளிவந்த 'விருமன்' என்ற படத்தில் கூட கார்த்தியின் அண்ணி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து அசத்தியிருந்தார்.


சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பிஸியாக இருந்து வரும் மைனா நந்தினி, யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு துருவன் எனும் அழகிய ஆண் குழந்தை உள்ளார்.


மகனின் இரண்டாவது பிறந்ததினத்தை ஒட்டி இருவரும் வெளிநாடுகளிற்கு சுற்றுலாப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்தவகையில் இவர்கள் சிங்கப்பூர் சென்ற புகைப்படங்கள் தற்போது தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதோடு அவை இணையத்தில் வைரலாகியும் வருகின்றன.


இந்நிலையில் தனது மகன் முன்னாடி தன்னுடைய கணவனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மைனா நந்தினி தற்போது வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நந்தினியின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement