• Apr 26 2024

சிம்புவின் பத்துத் தல படத்திலிருந்து வெளியாகிய புது அப்டேட்- இன்னும் இரண்டு நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படம் கன்னடத்தில் ஷிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மஃப்டி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் தழுவலாக தயாராகி உள்ளது. . மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். 

இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.பத்து தல படத்தில் சிம்பு உடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


இப்படத்தின் டீசர் கடந்த 3ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் பத்துத் தல படத்தின் 2வது சிங்கிள் பாடல் வருகின்ற 13ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேம் சிம்பு பத்துதல திரைப்படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அண்மையில் புதிய அப்டேட் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement