• Mar 27 2023

அவனோட லைப்ல தலையிட யாருக்கும் உரிமை இல்லை- மகனின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் இறுதியாக மாமன்னன் திரைப்படம் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இபபடமே உதயநிதியின் இறுதிப்படமாகும்.இதனை அடுத்து முழுநேரமாக அரசியலிலே கவனம் செலுத்தி வருகின்றார். இவர் அண்மையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சராகவும் பதவியேற்றார். இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.


அதில்  இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசினார். அதில் கூறியதாவது  ’அவருக்கு 18 வயது ஆகிவிட்டது, இது அவருடைய பர்சனல், எனக்கும் என்னுடைய மனைவிக்கும் அவருக்குமான விஷயம் இது. இதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட விரும்பவில்லை’ என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


மேலும் இந்த பேட்டியில் 'கலகத்தலைவன்’ படத்தில் ஒரு சில மாற்றங்கள் நான் செய்ய சொன்னேன், ஆனால் அதை மகிழ்திருமேனி செய்யவில்லை என்றும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement