• May 02 2024

நடிகர் விஜய்க்கு மாளவிகா மோகனன் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் மெசஜ் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகிலே "பட்டம் போலே" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவரே நடிகை மாளவிகா மோகனன். எனினும் இவர் தமிழ் சினிமாவில் ரஜினியின் 'பேட்ட' என்ற படத்தின் மூலமாகவே நடிகையாக அறிமுகமாகி இருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 'மாறன்' படத்தில் இணைந்து நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படமானது மாபெரும் தோல்வியடைந்தது.

எனினும் இதன் பின்னரும், சில திரைப்படங்களில் தொடர்ந்தும் பிசியாக நடித்தும் வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் பிரபல ராப் இசைக் கலைஞர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து, மாளவிகா மோகனன் கவர்ச்சியாக ஆடியுள்ள இசை வீடியோவான 'TAUBA', வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் நடாத்தினார். அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் "நடிகர் விஜய் அண்ணாவுக்கு நீங்கள் வாட்ஸ் அப்பில் இறுதியாக அனுப்பிய மெசேஜ் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு நடிகை மாளவிகா மோகனன் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற மெசேஜை தான் கடைசியாக அனுப்பியிருந்தேன்" என வீடியோ ஒன்றின் மூலமாக பதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement