• Mar 26 2026

ஈரமான ரோஜாவே 2 தொடரை போல விரைவில் நிறைவுக்கு வரும் முக்கிய சீரியல் தொடர்... அதற்கு பதிலாக ஆரம்பமாகவுள்ள புதிய தொடர்....

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு பிரபலமான தொடர் நிறைவுக்கு வரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  


சமீப மாதங்களாக காற்றுக்கென்ன வேலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என  முக்கிய தொடர்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதன் பிறகு இன்னும் சில புதிய சீரியல்கள் ஆரம்பமாகவுள்ளதாக ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. 


இந்நிலையில் விரைவில் ஈரமான ரோஜாவே 2 தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வர சில படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து இந்த நேரத்தில் தான் மற்றொரு தொடர் முடிவுக்கு வரும் தகவல் வந்துள்ளது.


அதாவது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த கண்ணே கலைமானே தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டதாம், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணே கலைமானே தொடருக்கு பதிலாக சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement