• May 20 2024

பிக் பாஸ் வீட்டில் நுழையவிருக்கும் பிரபல தமிழ் பட விமர்சகர்-அட இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சினிமா விமர்சகர் ஒருவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி ஆரம்பமாகிறது. முந்தைய 5 சீசன்களை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். தேதியை அறிவித்தாலும் இன்னும் போட்டியாளர்களின் பட்டியலை வெளியிடவில்லை. இந்நிலையில் தான்  தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் வசித்துக் கொண்டு தமிழ் படங்களை விமர்சனம் செய்யும் பிரபல விமர்சகர் ஒருவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. வெளிநாட்டில் வசிக்கும் அந்த இரண்டு விமர்சகர்களில் யாராக இருக்குமென பார்வையாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.



அத்தோடு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் மாடலும் கலந்து கொள்கிறாராம். முன்னதாக மாடல்களான ரைசா வில்சன், மீரா மிதுன் ஆகியோரை அழைத்து வந்தார் பிக் பாஸ். அதில் மீரா மிதுன் விஷயம் பெரிய பிரச்சனையானதை பிக் பாஸ் பார்வையாளர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. இவ்வாறுஇருக்கையில்  ஒரு மாடல் வருகிறார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக நடித்த மைனா நந்தினியை கண்டிப்பாக பிக் பாஸ் 6 வீட்டில் பார்க்கலாமாம். அத்தோடு மைனா சண்டக்கோழியாக மாறி எல்லோரையும் சமாளிப்பாரா இல்லை சக போட்டியாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் அழுதுவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement