• May 18 2024

பிக்பாஸ் பிரபலத்தை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர்-வெளியான தலைப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் இறுதியாக பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தயாரித்து இருந்தார் 

இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பிரபல விஜே மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவ்வாறு இருக்கையில் சமூகவலைத்தளத்தில் இவரைப் பற்றி ஒரே பேச்சாக உள்ளது.



இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ். அவர் ஷோவில் செய்த விஷயங்களை தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்ற அவர் டைட்டில் ஜெயித்தார்.

இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தான் அவருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.



அது பற்றி பாலாஜி முருகதாஸ் பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும் தற்போது தான் இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது இருக்கிறது.

அத்தோடு மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என அந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். அது entertainer படமாக இருக்கும் என பாலாஜி முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார். 



Advertisement

Advertisement