• Apr 24 2026

857 லிங்குகள் காலி! - பாட்ஷாவின் 'ததீரி' பாடலுக்கு விழுந்த பலத்த அடி..

shali / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய ததீரி பாடலுக்கு தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல ராப் பாடகரான பாட்ஷா பாடிய இந்த பாடல், பெண்கள் மற்றும் சிறார்களை குறித்துக் கூறப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட சில வரிகளால் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த விவகாரம் பெரிதாக மாறிய நிலையில், ஹரியானா பொலிஸ் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வந்த இந்த பாடலின் பல லிங்குகள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பாடலுடன் தொடர்புடைய மொத்தம் 857 லிங்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், யூடியூப்பில் இருந்த 154 வீடியோக்களும், இன்ஸ்டாகிராமில் இருந்த 703 ரீல்ஸ்களும் அடங்கும். குறிப்பாக, இந்த பாடல் தொடர்பான உள்ளடக்கங்கள் வேகமாக பரவி வந்ததால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் சிறார்களை அவமதிக்கும் வகையில் உள்ளடக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளே இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளன.


Advertisement

Advertisement