• May 26 2026

83 புதிய ஸ்பெஷல் லுக்கை சூப்பர் ஸ்டாருக்காக ரெடி பண்ணிய இயக்குநர்.? மெகா அப்டேட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 75 வயதை கடந்த பின்பும் திடமாக படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் லோகேஷ் கூட்டணியில் ரஜினிகாந்த்-கமலஹாசன் இணைந்த புதிய படத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும், அவருடைய நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தலைவர் 173’ படத்திற்கு தற்போது மாபெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன. அதன்படி, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி முன்னணி டிசைனர்களுடன் இணைந்து, ரஜினிக்காக சுமார் 83 விதமான தோற்றங்களை வடிவமைத்துள்ளார்.


இதில் மிகவும் தனித்துவமான மூன்று ஸ்பெஷல் கெட்டப்புகள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரஜினிகாந்த் நேரில் அவற்றை பார்வையிட்டு, தனக்கு மிகவும் பொருத்தமான ஒரு மாஸ் லுக்-ஐ இறுதி செய்யவுள்ளார்.

இந்த புதிய கெட்டப் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், புதுமையையும் தரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement