தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என திரையுலகில் பல மொழிகளில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள கீர்த்தி சுரேஷ், சமீபத்திய ஒரு ஸ்டைலிஷ் புகைப்படம் மூலம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை அசத்தியுள்ளார். வழக்கமாக பட்டுப் புடவையோ அல்லது சட்டையோ அணிந்து தமிழ்ப்பண்பாட்டு அழகில் திகழும் இவரை திடீரென ஒரு புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் மாடர்ன் லுக்கில் பார்த்த ரசிகர்கள், "இது நம்ம கீர்த்தியா?" என்று ஆச்சரியத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்களில் அவர் கர்லிங் செய்யப்பட்ட தலைமுடியுடன் கமெராவுக்கு கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இயற்கையான பியூட்டி என்று அழைக்கப்படும் கீர்த்தி தற்பொழுது புதிய லுக்கில் காட்சியளிக்கின்றார். 'சில்க் ஸ்மூத்' ஹேர் ஸ்டைலிலிருந்து ‘கர்லிங்’ லுக்கிற்கு மாறிய கீர்த்தியின் இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ளது.
கீர்த்தி இந்த மாடர்ன் ஸ்டைல் மூலம் சினிமா உலகிற்கு மீண்டும் என்ட்ரி கொடுக்கவே தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் எனச் சிலர் கருதுகின்றனர். பேஷன் என்பது மாற்றத்தைக் கொண்டு வருகிறது. அதேபோல் ஒரு நடிகைக்கும் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு லுக்கும் ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்கின்றது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தன்னை கிளாமராக மாற்ற முயற்சி செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!