• Sep 07 2026

அடேங்கப்பா.! ஸ்ரீதர் மாஸ்டரின் அடுத்த மூவ் இதுதானா.? லீக்கான போட்டோஸால் ஷாக்கில் ரசிகர்கள்

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

ஸ்ரீதர் மாஸ்டர் தனது நடனப் பயணத்தில் அடுத்த கட்டமாக புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் உதவி நடன இயக்குனராக பணியாற்றி, பின்னர் 2006-ம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் தான் ஸ்ரீதர் மாஸ்டர். தனது தனித்துவமான நடன அசைவுகள் மற்றும் குத்து நடனங்களால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.


குறிப்பாக ‘நாக்கு மூக்கா’ பாடலுக்கு அவர் அமைத்த நடனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீதர் மாஸ்டர், சினிமாவை தாண்டியும் நடனத்திற்காக தொடர்ந்து தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

தனியாக நடனப் பயிற்சி மையம் நடத்தி வரும் அவர், தனது மகளுடன் இணைந்து பல்வேறு நடன வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், நடனத்துறையில் தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஸ்ரீதர் மாஸ்டர் தற்போது புதியதாக ‘Ars Dance Academy’ என்ற நடனப் பயிற்சி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கான பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வின் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீதர் மாஸ்டரின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் தொடங்கிய தனது நடனப் பயணத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில் அவர் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, நடன ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement