• Jan 18 2025

"வின் கோல்ட் வித் தங்கலான்" தங்கலான் படக்குழுவின் புதிய அறிவிப்பு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் சியான் விக்ரமின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியிருக்கும் "தங்கலான்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கபட்டதில் இருந்து படத்தின் மீதான எதிரிபார்ப்பை  நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில் வெளியாகின்றன புதிய புதிய அறிவிப்புகள்.

Thangalaan Movie (Aug 2024) - Trailer, Star Cast, Release Date | Paytm.com

படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் படக்குழு இன்று மாலை 6 மணிக்கு கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில், ரசிகர்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்கள்.இந்நிலையில் "தங்கலான்" படத்தின் 'மினுக்கி மினுக்கி' பாடலுக்கான சிறந்த ரீல் விடியோவை பதிவு செய்யும் இருபது நபர்களுக்கு தங்கக்காசுகள் வெல்லும் வாய்ப்பினை வழங்குவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.


மேலும் அதையும் தாண்டி வெற்றியாளர்கள்  "தங்கலான்" படக்குழு மற்றும் நடிகர்களுடன் உணவருந்தும் வாய்ப்பினையும் வெல்லமுடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் ரீலில் ட்ரெண்டிங்கில் உள்ள அனைத்து பாடல்களையும் பின்தள்ளி தங்கலானின் மினுக்கி பாடல் முன்னிலை பிடிக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை.


Advertisement

Advertisement