பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே காணப்படுவதால் போட்டியாளர்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியின் சுவாசத்தை அதிகரித்து உள்ளார்கள். ஆனாலும் சிலர் சக போட்டியாளர்களை பழி தீர்ப்பதற்காகவே உள் நுழைந்து உள்ளார்கள்.
d_i_a
இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஞ்சரி, ராணவின் எலிமினேஷன் பலருக்கும் எதிர்பார்க்காத ஒன்றாக காணப்படுவதோடு ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் காணப்படுகிறது. அதற்குக் காரணம் மஞ்சரியும் ராணவும் வலிமையான போட்டியாளர்களாக காணப்பட்டது தான்..
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினாட்டாகி வெளியே சென்ற ராணவை, பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சனம் ஷெட்டி நேரில் சந்தித்து அவருக்கு தனது அன்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஏற்கனவே ராணாவின் எவிக்சன் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்த சீசனில் விஜய் சேதுபதியின் கோஸ்ட் பற்றியும் கடுமையாக விமர்சித்து இருந்தார் சனம். அத்துடன் அவர் மஞ்சரி, ராணாவுக்கு அதிக சப்போர்ட் பண்ணிய ஒருவராகவும் காணப்படுகின்றார்.
இவ்வாறான நிலையில் ராணாவை நேரில் சந்தித்து அவருக்கு தனது அன்பு பரிஸை கொடுத்ததோடு தனது அட்வைஸையும் வாரி வழங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Listen News!