ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஆல் இந்தப் படம் தள்ளிப் போனது.
இதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்திற்கான பணிகள் யாவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அஜித்தின் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் இது தோல்வி படம் எனவும் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ஒரு சர்ப்ரைஸ் கேமியோ ரோல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் சிம்ரன் கேமியா ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன..
சுமார் 270 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரசன்னா, சுனில், த்ரிஷா ஆகியோர் நடித்து வருகின்றார்கள். இந்த படம் அஜித் குமார் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக அமையும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அஜித் படத்தில் மீண்டும் சிம்ரன் இணைய உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது. மேலும் ஏற்கனவே அவள் வருவாளா, வாலி, உண்மை கொடு என்னை தருவேன் ஆகிய படங்களில் அஜித்தும் சிம்ரனும் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!