கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சிவகார்த்திகேயன் தனது உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உயர்ந்துள்ளார் . விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கு அடுத்தப்படியில் சிவகார்த்திகேயனை பலரும் கொண்டாடி வருகின்றார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் இவருடைய திறமையை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இதில் அவர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகின்றார். இந்த படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை சுதா கொங்கார இயக்கி வருவதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த படத்திற்கு பராசக்தி என டைட்டில் இடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவத்தை கடற்கரை மணலில் தத்ரூபமாக வரைந்து அவருக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!