• Jul 18 2025

நடிகர் சங்கம் உதவி செய்யுமா..? இல்லையா..? சோகத்தில் மறைந்த சின்னத்திரை நடிகரின் மனைவி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'நிழல்கள்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ராஜசேகர் பின்னர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தார். அவரது மனைவி தாராவுடன் சேர்ந்து சென்னை வடபழனியில் வீடு கட்டி வாழ்ந்தனர். இந்த வீட்டுக்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தனர்.


ராஜசேகர் உடல்நலக் குறைவால் காலமான பிறகு அவரது மனைவி தாரா கடனை அடைக்க முயன்றபோதும் சிலர் அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி மற்றும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வீட்டை சீல் வைத்து தாராவை வெளியேற்றியுள்ளனர்.


இந்த நிலையில் தற்போது தாரா நடிகர் சங்கத்தை நாடி உதவியை கோரியுள்ளார். மேலும் நடிகர் சங்கம் உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படும் அமைப்பு என்பதால் அவர்கள் தாராவுக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement