• May 20 2024

பிக்பாஸ் சீசன் 6 ஐ தொகுத்து வழங்கப்போவது கமலா? அல்லது சிம்புவா?- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முதல் சீசனிற்கு பெரிய எதிர்ப்பு இருந்தாலும் அடுத்தடுத்த சீசன்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நிறைவுக்கு வர பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில், முதல் 5 சீசன்களில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள்.

கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வருடம் ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 2022 ஜனவரியில் முடிவடைந்தது.பிக்பாஸ் சீசன் 5 இன் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் 6வது சீசன் இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் சிம்புவே தொகுப்பாளராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement