• May 20 2024

தனது காதலனை மூன்று முறை திருமணம் செய்த பிரபல நடிகை- அட இவருக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் இருக்கின்றதாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகியாக வலம் வருபவர் தான் கோர்ட்னி கர்தாஷியன். இவர் பிரபல நடிகையாகவும் வலம் வருகின்றார். இவர் பிரபல டிரம்ஸ் கலைஞரான டிராவிஸ் பேக்கர் என்பவரைக் காதலித்து வந்தார்.

இதையடுத்து லாஸ் வேகாஸில் இருவரும் ஜாலிக்காக ஒரு முறை திருமணம் செய்திருக்கிறார்கள். அத்தோடு அது பொய்யான திருமணம், ஜாலிக்காக செய்தது என்றார்கள். பின்னர் கலிபோர்னியாவில் இருக்கும் சான்டா பார்பரா பகுதியில் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையடுத்து இத்தாலியில் இருக்கும் அரண்மனை ஒன்றில் மீண்டும் கோர்ட்னி, டிராவிஸின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இப்படி, மூன்று முறை திருமணம் செய்துள்ளனர்.

அந்த திருமணத்தில் கோர்ட்னியின் மகன்கள் மேசன், ரெய்ன், மகள் பெனிலோபி, டிராவிஸின் மகன் லாண்டன், மகள்கள் அலபாமா, அடியானா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.மேலும் கோர்ட்னியின் தாய் கிறிஸ் ஜென்னர், சகோதரிகள் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், கென்டால் ஜென்னர், கைலி ஜென்னர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement