• Mar 15 2026

கோமதியை வம்புக்கு இழுத்த பாக்கியம்.! மயிலின் வார்த்தையால் ஷாக்கில் மீனா.. டுடே எபிசொட்

shali / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் மயிலைப் பார்த்து அந்த வீட்டில இவ்வளவு நடந்திருக்கு ஆனா எதுவுமே நடக்காத மாதிரி சந்தோசமா இருக்கிறாங்க என்கிறார். அதைக் கேட்ட மீனா நீங்க வேற நேரம், காலம் தெரியாமல் எதையாவது பேசிவைக்காதீங்க என்கிறார். அதனை அடுத்து கோமதி மகள் பேசினால் பயமா இருக்கும் இந்தப் பொம்பிள பக்கத்தில வந்தாலே பயமா இருக்கு என்று பாக்கியத்தைப் பார்த்துச் சொல்லுறார். 

அதைக் கேட்ட பாக்கியம் நாங்க தான் அப்படியே வில்லி, இந்த அம்மா பச்சப் பிள்ளை என்கிறார். அப்படியே பாக்கியமும் கோமதியும் கொஞ்ச நேரம் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த மீனா புதுசு புதுசா பிரச்சனையை உருவாக்காதீங்க.! இருக்கிறதே போதும் என்கிறார். அதனை அடுத்து கோமதி மீனாவைப் பார்த்து நீ உன்ட மாமாவோட பேச்சையும் மதிக்கமாட்டியா என்று கேட்கிறார்.


மேலும், உன்னை நம்பி வந்தன் பார் என்னைச் சொல்லணும் என்று சொல்லிட்டு கோமதி அங்கிருந்து கிளம்புறார். அதைத் தொடர்ந்து பாக்கியம் மீனாவைப் பார்த்து இந்த பேச்சை வாங்கிறதுக்கு தான் என்னோட பொண்ணை வரச்சொன்னியா என்று கேட்கிறார். பின் மயில் நான் பண்ண தப்புக்கு அனுபவிக்கிறேன், இதுக்கு மேல என்னோட வாழ்க்கையை சரி செய்யுறேன் என்று நீயா எதுவும் செய்யாத என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.

மறுபக்கம், காந்திமதி பாண்டியனைப் பார்த்து கோமதியோட கதைக்கச் சொல்லுறார். அதுக்கு பாண்டியன் கோமதி இப்படி பண்ணுவாள் என்று கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல என்கிறார். அதனை அடுத்து மீனா தன்ர அம்மாவுக்கு போன் எடுத்து எப்படி குழம்பு வைக்கிறது என்று கேட்கிறார். பின் மயில் மீனாவுக்கு போன் எடுத்து Sorry சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 


Advertisement

Advertisement