• Apr 12 2026

அர்ஜுன் தாஸுக்கு காதல் தோல்வியா? லீக்கான பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர் அர்ஜூன் தாஸ். குறிப்பாக, வில்லன் கேரக்டர் ரோல்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள அவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு ஸ்டோரி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அர்ஜூன் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு வரியை பகிர்ந்திருந்தார். அதில், “ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால்… அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும்?” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வைரலாகி விட்டது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர், இந்த வார்த்தைகள் அர்ஜூன் தாஸின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்துகிறதா? என்று கேள்வியை எழுப்புகின்றனர். அத்துடன், அவர் உண்மையில் காதல் தோல்வியால் மனவேதனையில் இருக்கிறாரா? என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement