• Apr 12 2026

நான் பொண்ணா பிறந்ததுனால 3 நாளா என்ன வந்து பார்க்கல..- தந்தை குறித்து குஷ்பு சொன்ன தகவல்

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை குஷ்பு. பல வருடங்களாக திரையுலகில் சிறப்பாக பயணம் செய்து வரும் அவர், தற்போது அரசியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு நேரங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களையும் சிறுவயது நினைவுகளையும் திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்வதும் குஷ்புவின் தனிச்சிறப்பாகும்.


அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துகொண்ட சில கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக தனது தந்தை குறித்து அவர் கூறிய நினைவுகள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன.

குஷ்பு தனது சிறுவயது வாழ்க்கையை நினைவுகூர்ந்து, “என் குடும்பத்துல மூணு அண்ணனுக்கு அப்புறம் தான் நான் பிறந்தேன். என் அம்மாவுக்கு ரொம்ப செல்லம். ஆனா, எங்க அப்பா மேல எனக்கு பெரிய அபிப்ராயம் இல்ல. ஏன்னா, நான் பிறந்தவுடனே நான் பொண்ணா பிறந்துட்டேன்னு 3 நாள் என்ன வந்து பார்க்கல.

நான் எங்க அம்மா மூணு அண்ணங்க கூட தான் நான் வளர்ந்தேன். நான் வளர்ந்த ஒட்டுமொத்த காலனில நான் ஒருத்தி தான் பொண்ணு. மீதி எல்லாம் பசங்க தான். அப்படி தான் நான் வளர்ந்தேன். அதனால தான் நான் கொஞ்சம் கரடு முரடா இருக்கன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது சிறுவயதில் ஏற்பட்ட இந்த அனுபவத்தை அவர் பகிர்ந்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பலரும் அவரது கருத்தை பகிர்ந்து பெண்கள் குறித்து சமூகத்தில் இன்னும் மாற்றம் தேவை என்பதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement