• May 27 2026

தனுஷின் ‘கர’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது பல புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படமாக உருவாகி வருவது ‘கர’ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இளம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள திரையுலகில் கவனம் பெற்ற இளம் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். பல்வேறு உணர்ச்சிகள், அதிரடி மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


‘கர’ திரைப்படத்தின் முக்கிய அப்டேடாக, இந்த படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. 

இத்திரைப்படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக இசை அமைப்பாளராக G. V. பிரகாஷ்குமார்  இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் தனித்துவமான இசையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ‘கர’ திரைப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல், அதாவது பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement