• May 30 2026

அஜித் குமாருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான கார் பரிசு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், கார் ரேசிங்கிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இதற்காக தன்னுடைய நேரத்தை சினிமாவுக்கும் கார் ரேசிங்கிற்கும் சமமாக வழங்கி வருகிறார்.

சமீபத்தில் துபாயில் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த அஜித், அந்த நேரத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் சிக்கினார். இதற்காக அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். எனினும், அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என அவரது மேனேஜர் வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமாருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான BE 6 SUV காரை மகிந்திரா குழுமம் பரிசாக வழங்கியுள்ளது. மகிந்திரா குழுமத்தின் வாகனத் தொழில் பிரிவு தலைவர் ஆர். வேலுச்சாமி இந்த காரை வழங்கினார்.


அஜித் குமாரின் ரேசிங் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பலரும் அவரை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement