• Apr 12 2026

மனோஜின் திருமண பேச்சு; உண்மையை உடைத்த அண்ணாமலை.! இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டிற்கு பெண் வீட்டார் மாப்பிள்ளை பார்க்க வருகின்றனர். இதன்போது விஜயா உண்மையை மறைத்து பேசிக் கொண்டிருக்க, இடையில் அண்ணாமலை தனது 3 பிள்ளைகள் பற்றியும், எல்லோருக்கும் திருமணம் ஆனது பற்றியும், மனோஜிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி தற்போது விவாகரத்தில் இருப்பது பற்றியும் கூறுகிறார்.

இதைக் கேட்ட பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்ததுடன், இருவரும் காதுக்குள் ரகசியமாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் இறுதியில், “எங்களுக்கு திருமணம் சம்மதம். ஒரு முறை பெண்ணையும் வந்து பார்க்கலாம்” என்று கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம், ஹோட்டல் ஒன்றில் காத்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த சத்தியா ரோஜா கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி ரேகாவுக்கு கால் செய்து எங்கே இருக்கிறாய்..? என்று விசாரிக்கிறார். இதனால் அவர் அப்செட் ஆகிவிடுகிறார். மேலும், “எனக்கு இருக்கிற ஒரே பிரச்சினை அம்மாதான்” என்று கூறுகிறார்.


இறுதியில் மீனா கோவிலுக்கு சென்று அண்ணாமலைக்கு எதுவும் நடக்கக் கூடாது என அடி பிரதட்சணம் செய்கிறார். அங்கு வந்த ஸ்ருதி அதற்கு விஞ்ஞான விளக்கம் அளிக்கிறார். ஆனாலும், தானும் ரவியும் ஒன்று சேர வேண்டும் என்று அவர் கூட அங்கு பிரதட்சணம் செய்கிறார்.

மேலும் விஜயா அங்கு வந்து இருவரையும் பார்த்து பேசுவதுடன், மனோஜுக்கு பெண் பார்க்கப் போகும் விஷயத்தையும் கூறுகிறார். இதுவே இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement