பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி மீனாவுக்கு போன் எடுத்து காலையில ஏன் அப்படி செய்தா என்று கேட்கிறார். அதைக் கேட்ட மீனா அதுதான் காலையிலேயே திட்டியாச்சு எல்லோ மறுபடியும் ஏன் திட்டவா போன் எடுத்தீங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோமதி அவள் மேல உனக்கு அப்புடி என்ன பாசம் என்று தான் புரியல என்கிறார். மேலும், அவள் நம்ம வீட்டுக்கு வேண்டாம் மீனா என்கிறார் கோமதி.
அதனை அடுத்து மீனாவும் கோமதியும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போறதாக பிளான் பண்ணுறார்கள். அதை மீனா செந்திலுக்கு சொல்ல, செந்தில் கண்டுக்காமல் போனில கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மீனா கோபப்படுறார். மறுநாள் காலையில காந்திமதி கோமதியைப் பார்த்து ரெண்டு பொம்பிளைங்க தனியா போய்ட்டு வந்திடுவீங்களா என்று கேட்கிறார்.

அதெல்லாம் போய்டுவோம் என்கிறார் கோமதி. அதனை அடுத்து கோமதி கோவிலுக்கு போற அவசரத்தில போனை எடுக்காமலே பஸ் ஸ்டாண்டுக்குப் போறார். அதைக் கேட்ட மீனா வீட்ட போய் எடுத்திட்டு வருவமா என்று கேட்கிறார். பின் கோமதி அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஒரு நாள் போன் இல்லாமல் இருந்திட்டு போறேன் என்கிறார்.
மறுபக்கம் காந்திமதி கோமதியோட போனை ஒழிச்சு வைக்கிறார். அப்ப தான் கோமதியோட பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறார். அதனை அடுத்து காந்திமதி நான் காலையில இருந்து கோமதியை பார்க்கல என்று வீட்டில இருக்கிறவங்க கிட்ட பொய் சொல்லுறார். அதுக்கு கதிர் கோவிலுக்கு எங்கயாவது போயிருப்பாங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!