• Mar 15 2026

ஓட்டு வரும்.. ஆனா சீட்டு வராது! - தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் மோகன் ஜி கொடுத்த அட்வைஸ்

shali / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் விஜய், சமீப காலங்களில் தனது அரசியல் பயணத்தால் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். நீண்ட காலமாக ரசிகர்களிடையே சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வந்த அவர், இறுதியாக அரசியலில் நேரடியாக களமிறங்கும் முடிவை எடுத்துள்ளார்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், நடிகர் விஜய் தனது நடிப்பு வாழ்க்கையை விட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட தீர்மானித்ததாக அறிவித்தார். அதன்படி, அவர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார். 


இந்த அறிவிப்பு வெளியான பிறகு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜயின் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கும், அவர் எதிர்காலத்தில் எந்த கூட்டணியில் இணைவார் போன்ற கேள்விகள் பலரிடமும் எழுந்தன.

இந்த சூழ்நிலையில், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. விஜயின் அரசியல் எதிர்காலம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும் 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஓட்டும் விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான். முதல் தேர்தலிலேயே துணை முதல்வராவதற்கோ எதிர்கட்சி தலைவராவதற்கோ நல்ல வாய்ப்பு அமைகிறது. தவெக NDA உடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லன்னா ஓட்டு வரும்.. ஆனா சீட்டு வராது.” என்று தெரிவித்தார்.

இயக்குநர் மோகன் ஜி கூறிய இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் சிலர் அதற்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement