• Jan 18 2025

பிக் பாஸ் வீட்டை ரணகளமாக்க நுழையவுள்ள பிரபல நடிகர்.. யாரு தெரியுமா? மாஸ் அப்டேட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் தான் கவின். இவர் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. அன்றைய நாளில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படமும் வெளியாக உள்ளது.

ஆரம்பத்தில் சின்னத் திரையில் சீரியல் நடிகராக காணப்பட்டவர் தான் கவின். இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் இன்றளவில் மட்டும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியலாக காணப்படுகின்றது. அதில் இவருடைய வேட்டையன் கதாபாத்திரம் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினுக்கு டைட்டிலை வெல்லும் வாய்ப்பு கிடைக்காவிட்டிலும் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி முதலாவது ஆகவே திரில்லர் படமான லிப்ட் படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தில் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார்.


இந்த நிலையில் கவின் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 8 இதைப் பற்றிய பட ப்ரமோஷனுக்கு கவின் கலந்து கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே டாடா திரைப்படம் வெளியான போது அதற்கான ப்ரோமோஷனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் கலந்து கொண்டார். தற்போது பிளடி பெக்கர் திரைப்படத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement