• Jan 15 2025

காதலில் விழுந்த சமந்தா... வைரலாகும் புகைப்படம்... யார் அந்த இயக்குனர்?

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் பிரிந்தது டோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சைதன்யா தற்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இந்நிலையில் சமந்தாவும் காதல் வயப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 


நடிகை சமந்தாவும், ஹனி பன்னி இயக்குனர் ராஜ் நிதிமோருவும் தற்போது ஆன்லைனில் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை ஆகஸ்ட் 8, 2024 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்த சில நாட்களிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 


ரெடிட்டில் வெளியான ஒரு பதிவு சமந்தாவுக்கும் ராஜுக்கும் இடையிலான உறவு குறித்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் நிகழ்ச்சிகளில் சந்தித்தபோது வதந்திகள் தொடங்கின. தற்போது வெளியாகியுள்ள புகைப்படமும் ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. 


Advertisement

Advertisement