• Apr 03 2025

2 நாளா அழுது புலம்பிய சுந்தர்.சி..!! பின்னணி காரணம் என்ன தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் மதகஜ ராஜா. இந்த படத்தை சுந்தர், சி  இயக்கி இருந்தார். மேலும் மதகஜராஜா படத்தில் விஷால், சந்தானம் ஆகியோரின் காமெடி காம்போ பக்காவா ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

மதகஜ ராஜா திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும்  வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. தற்போது வரையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

காமெடி படங்கள் திரில்லர், ஹாரர் படங்கள் இயக்குவதில் சுந்தர் சி கை தேர்ந்தவர் ஆக காணப்படுகின்றார். இவர் இயக்கத்தில் இறுதியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், மதகஜராஜா படத்திற்கு மக்கள் வழங்கி வரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பார்த்து இரண்டு நாட்களாக கண்ணீருடன் இருந்தேன் என சுந்தர். சி நெகிழ்ச்சி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். தற்பொழுது அவர் வழங்கிய பேட்டி வைரல் ஆகி வருகின்றது.

அதாவது மதகஜ ராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு கடவுளும் தமிழக மக்களும் தான் காரணம் என்று சுந்தர் சி கூறியுள்ளார். பொங்கல் ரைஸில் கேம் சேஞ்சர் உட்பட பல படங்கள் போட்டி போட்டு ரிலீஸான போதிலும் அதில் மமதகஜ ராஜா திரைப்படம் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement