• Mar 31 2025

5 வருஷமாச்சு மிஸ் யு பிக்பாஸ்! கியூட்டா பேசிய லொஸ்லியா! வைரலாகும் வீடியோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிறைய பிரபலங்கள் உள்ளே வந்தது தங்களது பட ப்ரோமோஷனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ்  சீசன் 3ல் போட்டியாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் சீசன் 8 வீட்டுக்குள் வந்துள்ளார். 


லொஸ்லியா தனது வெளிவரவிருக்கும் "Mr. Housekeeping" படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காகவே உள்ளே வந்தநிலையில் போட்டியாளர்களுடன் சகஜமாக பேசி "நீங்க ஆசைப்பட்டா கூட மீண்டும் இங்க வர்றது ரொம்ப கடினம் இது ஒரு நல்ல memories எல்லாரும் நல்ல விளையாடுங்க" என்று அட்வைஸும் செய்தார்.


லொஸ்லியா இவர் பிக்பாஸீடம் கிவுட்டாக பேசிய விடீயோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் லொஸ்லியா  " பிக்பாஸ் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். நாங்க ரகசியமா எவ்வளோ பேசி இருக்கோம். என்று சொல்கிறார். அதற்கு பிக்பாஸ் "எப்போ நீங்க தூங்கும் போது கன்பிரஷன் ரூமுக்கு கூப்பிட்டு சொன்னானே அதுவா" என்று கேட்கிறார். அதற்கு வெட்டப்பட்டுகொண்டே லொஸ்லியா  சிரிக்கிறார்.


மேலும் பிக் பாஸ் எப்படி இருக்கேன் பிக்பாஸ் 5 வருஷமாகிட்டு என்று சொல்கிறார். அதற்கு பிக்பாஸ் வளர்ந்து இருக்கீங்க பார்க்க பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள் நல்லா சாப்பிடுங்க என்று சொல்கிறார். லொஸ்லியா  மீண்டும் ரொம்ப நன்றி பிக்பாஸ் மிஸ் யு என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.       

Advertisement

Advertisement