• Jan 18 2025

பிறந்தநாளை கொண்டாடும் ஆக்‌ஷன் கிங்கிற்கு "விடாமுயற்சி" படக்குழுவின் வாழ்த்து !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என திரைத்துறையில் பன்முகங்களை கொண்ட நடிகர் அர்ஜுன் தமிழின் முக்கிய நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.அநேக சண்டை படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனுக்கு 'ஆக்‌ஷன் கிங்' என்ற பட்டம் அவரது ரசிகர்களால் அளிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

Arjun: விரக்தியில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்... கடைசியாக ஒரு மெகா ஆஃபர்...  இதுதான் காரணமா? | Arjun: Action King Arjun is frustrated as he only gets  opportunities to play the villain - Tamil Filmibeat

இவர் நடித்த படங்கள் இன்றும் கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போது நம்மை அறியாமலே நம்மை கட்டிப்போட வல்லனவாக இருக்கின்றன.குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த முதல்வன், ஆணை, ஜென்டில்மேன், மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற திரைப்படங்கள் இப்போது வரை எவர் கிறீன் படங்களாக இருக்கின்றன.

படம்

அண்மையில் வெளியான விஜயின் 'லியோ' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்ஜுன்.இன்று பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் தற்போது அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது 'விடாமுயற்சி' படக்குழு.


Advertisement

Advertisement