• May 22 2025

28 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த ஜோடி...! யார் யார் தெரியமா ?

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

90s கால கட்டத்தில்  முன்னணி நடிகர், நடிகையாக வலம் வந்தவர்கள் சரத்குமார் மற்றும் தேவயாணி இவர்கள்  "சூரிய வம்சம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தனர். இவர்கள் மீண்டும்  "3BHK " என்ற திரைபடத்தில் ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


1997 இல் வெளிவந்த "சூரிய வம்சம்" திரைப்படத்தின் மூலம் ஜோடியாக நடித்த இவர்கள் அன்றிலிருந்து இன்று வரை இந்த திரைப்படத்திற்கு தனி ரசிகர்கள் இருக்கிறர்கள். விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சரத் குமார் மற்றும் தேவயாணி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் ராதிகா, மணிவண்ணன், பிரியா ராமன், நிழல்கள் ரவி, தாரிணி, அஜய் ரத்னம், ஜெய் கணேஷ், சிவா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.


தற்போது  "3BHK " திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை மாதம் 4 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிப்பு படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில்  ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், ஆர். சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த ஜோடியை  மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த  ஆவலுடன் இருப்பதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement