பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக justice for pradeep என்ற ஹேஷ் டேக்கே வைரலாகி வருவதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல கண்டன குரல்களும் ஓங்கி வருகின்றது.
பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் தவறான அணுகுமுறையில் பழகியது என எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பினார்கள். இவர்களுக்கு ஆதரவாக கமலும் பேசியது இணைய வாசிகளுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா பிக்பாஸ் சீசன் 7 பற்றி கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
அதன்படி அவர் கூறுகையில், ' இப்போ ஒரே ஒரு போன் போட்டா போதும் பிக் பாஸ் வீட்டை போய் அடித்து நொறுக்கி விடுவாங்க. கலாச்சாரத்தின் சீர்கேடே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்று கூறி இருக்கிறார் கமல். அதுவும் நிக்சனும் ஐசுவும் சேர்ந்து செய்கிற காரியத்த பார்க்கும்போது கலாச்சாரம் எங்க போகுதுன்னே தெரியல. ஐசு கட்டி இருந்த வேட்டிய தூக்கி சரி செய்தார் நிக்சன்.. இதெல்லாம் பார்க்கத் தப்பா தெரியலையா?
ஆனால் கமல் சொல்வது போன்று அவர் ஒரு தவறை தண்டிக்க கூடியவராக இருந்தால் அதை விட்டுக் கொடுத்துப் போக மாட்டார். சிறிய தண்டனையாவது கொடுப்பார். மன்னிப்பு கூட கேட்க சொல்லுவார்கள் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இவ்வளவு நாள் பிரதீப்பை பேச விட்டு வேடிக்கை பார்த்து இப்போது அவரை வெளியேற்றி வைத்திருப்பது மக்களை ஏமாற்றுவதற்கு சமம்.
அதுபோல இந்த நிகழ்ச்சி மூலம் தவறான கலாச்சாரத்தை புகுத்துகிறார்கள், ஆபாச உடைகளை பெண்கள் அணிகிறார்கள். அதுமட்டுமா உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் பேசும் டாப்பிக் கூட ரொம்ப மோசமாகவே இருக்கிறது' என்று ராஜேஸ்வரி பிரியா கடுமையாக பேசியிருக்கிறார்
Listen News!