• Apr 28 2024

அண்ணாச்சியின் தி லெஜெண்ட் திரைப்படம் ரிலீஸ் திகதி எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தி லெஜெண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் 2022.05.29 அன்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி உட்பட பான் இந்தியா திரைப்படமாக ‘தி லெஜண்ட்’ வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தி லெஜெண்ட் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படம் ஜூலை 1 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாகவும் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement